கொடிகாத்த குமரன் 90-வது நினைவு நாளையொட்டி மரியாதை
ஈரோடு, ஜன.12-
ஈரோட்டில் சுதந்திர போராட்ட தியாகி கொடிகாத்த குமரன் அவர்களின் 90-வது நினைவு நாளையொட்டி சென்னிமலையில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு ஈரோடு மாவட்ட தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பாக மாவட்ட செயலாளர் சோழா மு.ஆசைத்தம்பி தலைமையில், வீ கோ ஆப் டெக்ஸ் தலைவர் சேவா ரத்னா யுனிவர்சல் டாக்டர் கே.என். நந்தகோபால் முன்னிலையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
உடன் மாநில இலக்கிய அணி அமைப்பாளர் சேலம் பாலன், மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளர் முருகானந்தபதி, மேற்கு கிளை பொருளாளர் தினமலர் சக்திவேல், கருங்கல்பாளையம் கிளைச் செயலாளர் செறுக்கலை செங்கோடன், செங்குந்தர் நகர் கிளை செயலாளர் வைரம், சென்னிமலை நகர கிளை ஐயப்பன், சிவசுப்பிரமணியம், வெண்டிபாளையம் கிளை தலைவர் பிரதாப், பெரிய வலசு கிளை கிருபா, சூரம்பட்டி கிளை அருண், சிவகிரி கிளைத் தலைவர் யோகானந்த், துணைத் தலைவர் காமராஜ், குஜரால், இளைஞரணி கதீர், பரணி, மணிமுத்து, கௌதம், சதீஷ்குமார், பரமேஸ்வரன், சென்னிமலை இளைஞரணி மெக்கானிக் சரவணன், சோமு, ஜீவா, வசந்த், கோகுல், விசு, தமிழினியன், திருச்செங்கோடு இளைஞரணி நித்திஷ், ஹரி, ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments