Breaking News

மத்திய அமைச்சரவை முக்கிய ஒப்புதல்

கடன்களின் கூட்டு வட்டிக்கும், சாதா வட்டிக்கும் உள்ள வித்தியாசத்தை ஊக்கத்தொகையாக வழங்க ஒப்புதல்

புதுடெல்லி, ஜன.20-

குறிப்பிட்ட சில கடன் கணக்குகளின் கீழ் வழங்கப்பட்ட கடன்களுக்கு கூட்டு வட்டிக்கும், சாதா வட்டிக்கும் இடையேயான வித்தியாசத்தை ஊக்கத்தொகையாக 6 மாதங்களுக்கு வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், குறிப்பிட்ட சில கடன் கணக்குகளின் கீழ் (01.03.2020 முதல் 31.08.2020 வரை) வழங்கப்பட்ட கடன்களுக்கு கூட்டு வட்டிக்கும், சாதா வட்டிக்கும் இடையேயான வித்தியாசத்தை ஈடுகட்ட கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகையாக 6 மாதங்களுக்கு ரூ.973.74 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பலன்கள்:

பெருந்தொற்று பாதிப்பால் ஏற்பட்ட மன அழுத்தத்திலிருந்து சிறு கடன்தாரர்கள் மீண்டெழ உதவும் வகையில், அவர்கள் தவணை தவறிய கடன் சலுகையை பெற்றிருந்தாலும் இல்லாவிட்டாலும், அனைத்துத் தரப்பினருக்கும் சமமான முறையில் உதவும் விதமாக இந்த ஊக்கத்தொகை பாரத ஸ்டேட் வங்கி மூலம்  வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததன் மூலம் இதனை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட ரூ.973.74 கோடியிலிருந்து கீழ் காணும் கடன் பெற்றவர்கள் பயனடையத் தகுதி பெற்றவர்கள் ஆவர்.

ரூ.2 கோடி வரையிலான குறு, சிறு, நடுத்தர தொழில் கடன்கள், 

ரூ.2 கோடி வரையிலான கல்விக் கடன்கள்

ரூ.2 கோடி வரையிலான வீட்டுவசதிக் கடன்

ரூ.2 கோடி வரையிலான நுகர்வோர் பயன்பாட்டு பொருள் கடன்

ரூ.2 கோடி வரையிலான கிரெடிட் கார்டு தவணைகள்

ரூ.2 கோடி வரையிலான வாகனக் கடன்கள்

ரூ.2 கோடி வரையிலான தனிநபர் கடன்கள்

ரூ.2 கோடி வரையிலான நுகர்வுக் கடன்கள்

👀👀 💐👀👀

துப்புரவுப் பணியாளர்களுக்கான பதவிக்காலம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு 

புதுடெல்லி, ஜன.20-

துப்புரவுப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீடிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், துப்புரவுப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் பதவிக்காலத்தை 31.03.2022-க்கு பிறகு 3 ஆண்டுகளுக்கு நீடிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

3 ஆண்டு கால நீடிப்புக்கான மொத்த செலவு சுமார் ரூ.43.68 கோடியாக இருக்கும். இந்த ஆணையத்தின் பதவிக்காலம் 3 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுவதால் நாட்டில் உள்ள துப்புரவு தொழிலாளர்களும் மனிதக் கழிவுகளை அகற்றுவோரும் பயன்பெறுவார்கள். 31.12.2021 கணக்கெடுப்பின்படி மனிதக் கழிவுகளை அகற்றுவோர் எண்ணிக்கை 88,098-ஆக இருந்தது.

👀👀 💐👀👀

கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் வழங்கும் கடனுக்கான வட்டி மேலும் குறைப்பு

புதுடெல்லி, ஜன.20-

மத்திய அரசுக்கு சொந்தமான வங்கி சாரா நிதி நிறுவனங்களான மின்விசை நிதிக்கழகம் மற்றும் கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் வழங்கும் அனைத்து வகையான கடன்களுக்கான வட்டி 40 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்பட்டுள்ளது.

இந்த வட்டி குறைப்பு குறித்து மத்திய மின்துறை மற்றும் புதிய - புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், மனநிறைவு தெரிவித்துள்ளார்.

இந்த இரு நிறுவனங்களின் வட்டி குறைப்பு நடவடிக்கை மின்சார வாரியங்கள் போட்டி அடிப்படையில்  கடனுதவி பெறவும், மின்சார கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு முதலீடு செய்யவும் உதவுவதுடன், நுகர்வோரும் குறைந்த கட்டணத்தில் நம்பகமான முறையில், மின்சாரத்தைப் பெற்று பயனடையலாம் என்றும் ஆர்.கே.சிங்  தெரிவித்துள்ளார்.

👀👀 💐👀👀

எரிசக்தி மேம்பாட்டு முகமையில்

ரூ.1500 கோடி முதலீட்டுக்கு

 மத்திய அமைச்சரவை ஒப்புதல் 

புதுடெல்லி, ஜன.20-

இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையில் ரூ 1500 கோடி முதலீட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

சுமார் 10,200 பணி-வருடங்கள் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும், வருடத்திற்கு சுமார் 7.49 மில்லியன் டன் கரியமில வாயு உமிழ்வைக் குறைக்கவும் இந்த முதலீடு உதவும். 

இந்திய அரசு, கூடுதலாக ரூ 1500 கோடி முதலீடு செய்வதன் காரணமாக இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை கீழ்காணும் பலன்களை பெறும்:

1. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு ரூ 12000 கோடி கடன் வழங்க முடியும், இதன் மூலம் 3500-4000 மெகாவாட் கூடுதல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறனுக்கான கடன் தேவை நிறைவு செய்யப்படும்.

2. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்திய அரசின் இலக்குகளை எட்டுவதற்கு பங்காற்றும் வகையில் அத்துறையின் நிகர மதிப்பை அதிகரித்து கூடுதல் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி திட்டங்களுக்கு கூடுதல் நிதிவசதி ஏற்படும்..

3. கடன் வழங்கும் மற்றும் கடன் பெறும் செயல்பாடுகளுக்கு வசதியளிக்கும் வகையில், மூலதனத்தையும் ஆபத்தையும்  சரிபார்த்து மதிப்பீடு செய்த  சொத்து விகிதாச்சாரம் மேம்படும்.

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மினி ரத்னா (வகை-1) நிறுவனமான இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கெனத் தனியாக , வங்கி அல்லாத நிதி நிறுவனமாக, 1987-ல் உருவாக்கப்பட்டது.

34 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்நுட்ப-வணிக நிபுணத்துவம் கொண்ட இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களூக்கான நிதியளிப்பில் முக்கியப்  பங்கு  வகிக்கிறது.

👀👀 💐👀👀

🔥Also Read வேலூர் வட்டார போக்குவரத்து துறையில் விலைபோகும் அதிகாரிகள்!

No comments

Thank you for your comments