மனதின் குரல் நிகழ்ச்சி ஆலோசனைகளை பகிருமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி
புதுடெல்லி, ஜன.20-
2022, ஜனவரி 30 மனதின் குரல் நிகழ்வுக்கு கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பகிருமாறு நாட்டு மக்களுக்குப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
2022, ஜனவரி 30 அன்று இடம் பெற உள்ள மனதின் குரல் நிகழ்வுக்கு கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பகிருமாறு நாட்டு மக்களுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து டிவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது, “இம்மாதம் 30-ந் தேதி 2022-ன் முதலாவது #மனதின் குரல் நிகழ்வு இடம் பெறும். ஊக்கமளிக்கும் வாழ்க்கை நிகழ்வுகள் மற்றும் தலைப்புகளில் பகிர்ந்து கொள்வதற்கு உங்களிடம் ஏராளமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
அவற்றை @mygovindia அல்லது நமோ செயலியில் பகிருங்கள். 1800-11-7800 என்ற எண்ணுக்கு அழைத்து உங்களின் தகவலைப் பதிவு செய்யுங்கள்”.
🔥Also Read வேலூர் வட்டார போக்குவரத்து துறையில் விலைபோகும் அதிகாரிகள்!
No comments
Thank you for your comments