கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த காரை ஊராட்சி கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமினை சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் துவக்கி வைத்தார்.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் காஞ்சிபுரம் அடுத்த காரை ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமினை சட்டமன்ற உறுப்பினர் சி. வி. எம்.பி. எழிலரசன் குத்து விளக்கு ஏற்றி துவக்கிவைத்து பார்வையிட்டார்.
இம்முகாமினில் ரத்தப் அழுத்த பரிசோதனை, நீரிழிவு நோய் பரிசோதனை,கண் பரிசோதனை, பல் பரிசோதனை, இசிஜி, ஸ்கேன், உள்ளிட்ட ஏராளமான பரிசோதனைகள் செய்யப்பட்டன.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் இதனைதடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட காய்கறிகள் பழவகைகள் கண்காட்சியை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் எஸ்.பி. பூபாலன், வாலாஜாபாத் ஒன்றிய குழு பெருந்தலைவர் தேவேந்திரன், மாவட்ட கவுன்சிலர் ராஜலட்சுமி, ஒன்றிய துணை செயலாளர்கள் படுநெல்லி, பாபு, கவிதா பாபு, மாவட்ட பிரதிநிதி பார்த்திபன், மாவட்ட மாணவரணி துனை அமைப்பாளர் ஆனந்தன், ஊராட்சி மன்ற தலைவர் வள்ளியம்மாள் செல்வ முருகையன், மாவட்ட விவசாய அணி தொழிலாளர் அணி அமைப்பாளர் வேதாச்சலம், வட்டார மருத்துவ அலுவலர் உமா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments