Breaking News

பல்வேறு வழக்குகளில் சிக்கி உரிமை கோரப்படாமலிருந்த வாகனங்கள் ஏலம்...

 காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சிக்கி காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாமலிருந்த வாகனங்கள்பொதுமக்கள் முன்னிலையில் இன்று  ஏலம் விடப்படுகிறது. கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில் வாகனங்களை ஏலம் எடுக்க ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் காவல் கோட்டத்திற்கு உட்பட்டு 14 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த காவல் நிலையங்களில் திருட்டு,விபத்து, உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கி உரிமை கோரப்படாத ஏராளமான வாகனங்கள் காவல் நிலைய வளாகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

வாகனங்களின் உரிமையாளர்களை கண்டுபிடித்து வாகனங்களை ஒப்படைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டும், வாகனங்களின் உரிமையாளர்களை கண்டுபிடிக்க இயலவில்லை,மேலும் வாகனங்களை யாரும் உரிமையும் கோரவில்லை என தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில்  காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாத வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் முன்னிலையில் ஏலம் விட்டு அதன் மூலம் வரும் விற்பனை தொகையினை அரசுக் கணக்கில் செலுத்த காவல்துறை இயக்குனர் கேட்டுக் கொண்டு உள்ளார்.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 காவல் நிலையங்களிலும் எவரும் உரிமை கோராத நிலையில் உள்ள 1817 இருசக்கர வாகனங்கள், 15 முன்று சக்கர வாகனங்கள், 26 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 1858 வாகனங்கள், காஞ்சிபுரம் மாவட்ட காவலர் பயிற்சி பள்ளி ஆயுதப் படை பயிற்சி மைதானத்திற்கு கொண்டு வந்து காட்சிக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் வாகன உரிமையாளர்கள் யாரேனும் இருந்தால்  உரிய ஆவணங்களை கொண்டுவந்து காண்பித்து வாகனங்களை எடுத்துச் செல்லவும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் உரிமை கோரப்படாத 1858 வாகனங்களும் இன்று காலை காலை 10 மணி முதல் காஞ்சிபுரம்  காவலர் பயிற்சி பள்ளி ஆயுதப் படை பயிற்சி மைதானத்தில், மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர்,ஆகியோரால் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் மூலம் ஏலம் விடப்பட்டு வருகிறது.

ஏலத்தில் பங்கு பெற விரும்பும் பொதுமக்கள் தவறாது கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும், வாகனத்தை ஏலம் எடுப்பவர்கள் ஏலம் கேட்ட தொகையுடன், இருசக்கர வாகனத்திற்கு 12% சதவீதமும், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18% சதவீதமும் விற்பனை வரியை செலுத்திவிட வேண்டும் என்றும்,ஏலத்தில் பங்கு பெற விரும்பும் பொதுமக்கள் தவறாது தங்களது அசல் ஆதார் கார்டு மற்றும் நகலை கொண்டுவர வேண்டும் என  காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

இருப்பினும் 1858 வாகனங்களை ஏலம் எடுக்க ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒரே நேரத்தில் வாகன ஏலம் நடைபெறும் இடத்தில் கொரோனா வைரஸ், ஓமைக்ரான் வைரஸ் குறித்த பயமின்றி ஏதும் இன்றி குவிந்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

பல ஆண்டுகளாக காவல் நிலையங்களில் யாரும் உரிமை கோரப்படாததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 1,858 வாகனங்களுக்கும்,முடிவு ஏற்பட்டு அரசுக்கு வருமானம் வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments