குப்பைக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு! நோய் தொற்று பரவும் அபாயம்!!
வேலூர், ஜன.24-
வேலூர் மாவட்டம் காட்பாடியில் வேலூர்&சித்தூர் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக செங்குட்டை பகுதியில் சாலையோரம் கழிவு கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசிவருகின்றது.
மேலும் கொசுக்கள், புழுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர்.
கொரோனா தொற்றால் பொதுமக்கள் கலக்கத்தில் உள்ள நிலையில் இந்த குப்பை கழிவுகளால் மேலும் தொற்று நோய் பயத்தால் மனரீதியில் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
குப்பை கழிவுகளை அகற்றாத காரணத்தால் துர்நாற்றத்தால் பொதுமக்கள் சிலர் குப்பகளை எரிக்கின்றனர்... இதனால் மேலும் அப்பகுதி புகையால் காற்று மாசு ஏற்படுகிறது..
ஆகையால் மாநகராட்சி அதிகாரி உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நோய் தொற்று பரவாமல் இருக்க குப்பைகளை அகற்றி, அங்கு மருந்து தெளிக்கவேண்டும்... செவி சாய்க்குமா மாநகராட்சி... உடனடி நடவடிக்கை எடுப்பார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
No comments
Thank you for your comments