Breaking News

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு மீறல் - 1024 பேர் மீது வழக்கு பதிவு... ரூ.2,04,800/- அபராதம் வசூலிப்பு...

 காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவை மீறியதாக மொத்தம் 1024 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்தவர்களிடமிருந்து  2,04,800/-  ரூபாய் அபராதம் வசூலிப்பு.

கொரோனா வைரஸ் பரவலை தடுத்திடும் வகையில் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு,மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவினை அமல் படுத்தி வருகிறது.

இந்நிலையில் 3-வது வாரம் ஞாயிற்றுக் கிழமையான நேற்று முழு ஊரடங்கு உத்தரவு காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமல் படுத்தப்பட்டு வந்தது.

ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையிலும்,தை மாத முகூர்த்த நாளான நேற்று, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திருமண விழாக்கள் நடைபெற்று வந்ததையொட்டி ஏராளமான பொதுமக்கள் அழைப்பிதழ்களை காட்டி, திருமணத்திற்கு சென்று வந்தபடி இருந்தனர்.

இதன் காரணமாக சாலைகளில் போக்குவரத்து காணப்பட்ட நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் என1,024 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது.

மேலும் முழு ஊரடங்கு உத்தரவை மீறிய காரணத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களிடமிருந்து அபராதமாக  2 லட்சத்து,4 ஆயிரத்து, 800 ரூபாய் அபராதமாக வசூலித்து  காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

No comments

Thank you for your comments