குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டி உடைந்து தெருக்களில் தண்ணீர் தேங்கும் அவலம்
வேலூர், ஜன.24-
வேலூர் மாவட்டம் பெருமுகை கிராமத்தில் ராமர் கோவில் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்கு சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டி உடைந்து குடிநீர் கசிந்து தெருக்களில் தேங்கி வருகிறது.
இதனால் தேங்கும் தண்ணீரில் கொசுப்புழுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருகின்றன.. இதனால் அப்பகுதியில் கொசுக்கள் மற்றும் விஷப் பூச்சிகள் வீடுகளில் வருகிறது.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் தெருக்களில் விளையாடுவதற்கு வசதியில்லாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் மிகவும் வேதனை அடைகின்றனர். மேலும், ஊரிலுள்ள காணாறு ஆக்கிரமித்து காணாறே இல்லாத அளவிற்கு தூர் வாராமல் முள் புதராக காணப்படுகிறது.
இதுகுறித்து பஞ்சாயத்து தலைவரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் குற்றம் சாட்டுகின்றனர்.
அப்பகுதி மக்கள் குறைகளை களைய, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பெருமுகை கிராம மக்களுக்கு ஆரோக்கிய வாழ்விற்கு வழி செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments
Thank you for your comments