சிறந்த மன்றங்களுக்கு நேரு யுவகேந்திரா இளைஞர் விருது !
நாமக்கல், ஜன.6 -
மந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நாமக்கல் மாவட்ட நேரு யுவகேந்திரா ஆண்டு தோறும் மாவட்ட அளவில் சிறப்பாக சேவை புரிந்த இளைஞர், மகளிர் மன்றங்களை தேர்ந்தெடுந்து ஊக்கப்படுத்தும் வகையில் சிறந்த இளைஞர் மன்றத்திற்கு விருது வழங்கி வருகிறது.
2020-2021ம் ஆண்டில் சிறப்பாக சேவை செய்த இளைஞர், மகளிர் மன்றத்திற்கு மாவட்ட அளவில் சிறந்த இளைஞர் மன்ற விருது வழங்கப்படுகிறது. இந்த விருதிற்கு நாமக்கல் மாவட்ட பதிவாளர் அலுவகத்தில் பதிவு பெற்றும், நேரு யுவகேந்திராவுடன் இணைந்து செயல்படுகின்ற இளைஞர் மகளிர் மன்றங்கள் விண்ணப்பிக்கலாம்.
01-04-2020 முதல் 31-03-2021 வரை மேற்கொள்ளப்பட்ட நற்பணிகள் மட்டுமே இந்த விருதிற்கு பரிசிலிக்கப்படும் இந்த விருது ரூ.25 ஆயிரம் சாசோலையும், நற்சான்றிதழும் வழங்கப்படும்.
மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் மன்றம், மாநில விருதுக்கு பரிந்துரை செய்யப்படும். மாநில அளவில் தேர்வு செய்யப்படும் மன்றத்திற்கு ரூ.75 ஆயிரம், காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மாநில அளவில் விருது பெறும் மன்றம் தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்படும்.
தேசிய அளவில் முதலிடம் பெறும் மன்றத்துக்கு ரூ. 3 லட்சம் காசோலை, சான்றிதழ் வழங்கப்படும். இதற்கான விண்ணப்ப படிவங்கள் நேருயுவகேந்திரா அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 06-01-2022 மாலை 5.00 மணிக்குள் தகுந்த ஆதாரங்கள் இணைத்து சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
போட்டியில் பங்கு பெற விருப்பம் உள்ளவர்கள் நேரு யுவ கேந்திரா, 27/ஈ 2 மாதா கோயில் தெரு, கணேசபுரம், நாமக்கள் 637002 என்னும் அலுவலக முகவரிக்கு நேரிலேயோ அல்லது 04286-225647, 7012103155, 9786192132 என்னும் தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம்.
No comments
Thank you for your comments