Breaking News

பள்ளிபாளையத்தில் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு!

நாமக்கல், ஜன.6-

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. 

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகர பகுதிக்கு உட்பட்ட ஆவாரங்காடு நியாயவிலைக் கடைகளில்  குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் பள்ளிபாளையம் திமுக நகர செயலாளர் அ.ரவிச்சந்திரன், மாவட்ட திமுக பொருளாளர் அ.குமார், நகர அவைத்தலைவர்  குலோப்ஜான் மற்றும் நகர இளைஞரணி, ஐடி விங் தொழில்நுட்ப பிரிவு, மாணவரணி, தொண்டரணி, வர்த்தக அணி, நெசவாளர் அணி, விவசாய அணி, வக்கீல்கள் பிரிவு, மகளிர் பிரிவு, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஏராளமான திமுகவினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments

Thank you for your comments