Breaking News

சேவல் சண்டை நடத்த அனுமதி கோரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு

ஈரோடு, ஜன.6-

இந்து மக்கள் கட்சி சார்பாக பொங்கல் மற்றும் மாட்டு பொங்கலை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் வீர தீர விளையாட்டுப் போட்டிகள் நடத்திக்கொள்ள பொதுமக்களுக்கு அனுமதி தர வேண்டும் என்றும் வீரதீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்துள்ளது  போல் ஈரோடு மாவட்டத்தில் இளைஞர்கள் சேவல் சண்டை நடத்த  பண்டிகை தினமான தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் ஆகிய நாட்களில் மட்டும் அனுமதி அளிக்க வேண்டும் என்றும்  ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  சசி மோகன் அவர்களிடம் மனு அளித்தனர்.  


இதில்  இந்து மக்கள் கட்சி  மேற்கு மண்டல செயலாளர் க.சி. முருகேசன் தலைமையில்,  மாநில அமைப்புச் செயலாளர் உழைப்பாளி பூபாலு,  இந்து மக்கள் கட்சி திருப்பூர் கோட்ட பொறுப்பாளர் சுரேஷ், இந்து மக்கள் கட்சி தொழிற்சங்க தலைவர் ஈஸ்வரன், மாவட்ட பொதுச்செயலாளர் தாமரைச்செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரவீன், பவானி ஒன்றிய செயலாளர்  யுவராஜ் ஆகியோர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  அவர்களை நேரில் சந்தித்து இந்நிகழ்ச்சிக்கு  அனுமதி வழங்குமாறு மனு அளித்து கேட்டுக் கொண்டனர்.


No comments

Thank you for your comments