Breaking News

லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர்கள் கைது.. குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை ... எச்சரிக்கை விடுப்பு..

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் . M. சுதாகர் . அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளத்தனமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியிருந்தார் . 

இந்நிலையில் சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காஞ்சிபுரம் பேருந்துநிலையம் மற்றும் காமாட்சியம்மன் சன்னதி தெரு ஆகிய இடங்களில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபர்களான 

1) செந்தில் ( 40 ) த/பெ. குமரவேல், நிமிர்ந்தகரை ஒத்தவாடை தெரு . காஞ்சிபுரம்  மற்றும் 

2 ) ஸ்ரீதர் ( எ ) தக்காளி ஸ்ரீதர் ( 42 ) த / பெ.சீனிவாசன், பாரதியார் நகர் . லாலாகுட்டை தெரு, சின்ன காஞ்சிபுரம் 

ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு . கள்ளத்தனமாக மது விற்பனை போன்ற குற்றச் செயல்களில் எவர் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார் . 



No comments

Thank you for your comments