Breaking News

முகக்கவசம் அணியாதவர்களுக்கு முகக்கவசங்களை வழங்கினார் எஸ்.பி., கண்காணிப்பாளர்

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் நகரின் பல்வேறு பகுதிகளில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தீடிரென சாலையில் முகக்கவசம் அணிந்திடாது வரும் வாகன ஓட்டிகளுக்கு முகக்கவசங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தமிழகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசானது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது இந்த நிலையில் காஞ்சிபுரம் நகரில் பொதுமக்கள் பலர் முககவசங்கள் அணிந்திடாது இருந்து வந்தனர்.

இதனை கண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் அவர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காஞ்சிபுரம் நகரின் முக்கிய சாலை சந்திப்பான மூங்கில் மண்டபம், காமராஜர் வீதி போன்ற  பகுதிகளின் வழியாக முகக்கவசம் அணிந்திடாது வரும் வாகன ஓட்டிகளுக்கு முகக்கவசங்களை வழங்கினர்.

மேலும் பேருந்து நிலையத்தில் முகக்கவசம் அணிந்திடாத பொதுமக்களுக்கும், பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கும் முகக்கவசங்களை வழங்கியதோடு வாடிக்கையாளர்களை அதிகளவில் சந்தித்து வரும்  வணிகர்களுக்கும், நடைபாதை வியாபாரிகளுக்கும் வழங்கியதோடு நோயின் தாக்கம் குறித்து எடுத்துரைத்து அறிவுறைகளை வழங்கினார்.

மேலும் தொடர்ந்து முகக்கவசங்களை அணிந்திடாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமெனவும் எச்சரித்தார்.



No comments

Thank you for your comments