காட்டன் பெட்டிங் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
காஞ்சிபுரம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் . M. சுதாகர் . அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காட்டன் பெட்டிங் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியிருந்தார் .
இந்நிலையில் விஷ்ணு காஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அருணா தியேட்டர் அருகே இரயில்வே ரோடு மற்றும் ரங்கசாமிகுளம் ஆகிய இடங்களில் அரசால் தடைசெய்யப்பட்ட காட்டன் பெட்டிங சூதில் ஈடுபட்டு கொண்டிருந்த சங்கர் த/பெ நடராஜன், கணேசன்ஷா த/பெ.முன்சிப்ஷா மற்றும் சம்பத் த/பெ.மாரி ஆகியோரை காவல் ஆய்வாளர், விஷ்ணு காஞ்சி காவல் நிலையம் அவர்கள் கைது செய்தார்.
காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அரசால் தடைசெய்யப்பட்ட காட்டன் பெட்டிங் மற்றும் சூதாட்டம் போன்ற குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்தார் .
No comments
Thank you for your comments