Breaking News

வேட்புமனு தாக்கல் தொடங்கிய நாளில் வேகவேகமாய் அரசியல் கட்சி தலைவர்களின் திருவுருவங்களை மூடிய மாநகராட்சி நிர்வாகம்...!

காஞ்சிபுரம்:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கிய நாளில் வேகவேகமாய் அரசியல் கட்சி தலைவர்களின் திருவுருவங்களை மூடிய காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம்.

அரசியல் கட்சி தலைவர்களின் திருவுருவச் சிலைகளை முன்கூட்டியே மூடாமல் மாநகராட்சி நிர்வாகத்தினர் அலட்சியம்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெறுகிறது இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்கி உள்ளது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் உள்ள 51 வார்டுகளுக்கு வேட்புமனு தாக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு கடந்த 26 தேதி வெளியிடப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்திருந்தது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததின் காரணமாக மாநகராட்சி முழுவதும் அரசியல் கட்சி விளம்பரங்கள் அரசியல் கட்சித் தலைவர்களின் திருஉருவங்கள் உள்ளிட்டவைகளை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இருந்த அரசியல் கட்சி தலைவர்களான பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, ஆகியோரின் திருவுருவச் சிலைகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் மறைக்காமல் அலட்சியமாக வைத்திருந்தனர்.

இந்நிலையில் வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கிய  நிலையில் வேட்புமனு வாங்க வந்தவர்கள் அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளை மறைக்காதது குறித்து கேட்டதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் திருவுருவச் சிலைகளை அவசர அவசரமாக மாநகராட்சி ஊழியர்கள் துணிகளைச் சுற்றி மறைத்து வைத்தனர்.


திடீரென மாநகராட்சி ஊழியர்கள் தலைவர்களின் சிலைகளுக்கு துணிகளை சுற்றி மறைத்ததால் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments

Thank you for your comments