Breaking News

வேட்புமனுத் தாக்கலுக்குகான முன்னேற்பாடுகள் குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு

காஞ்சிபுரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகளை காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி.

வேட்புமனுத் தாக்கலுக்கு கான முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.



காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள காஞ்சிபுரம் பெருநகராட்சி தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது.

51 வார்டுகளுடன் மாநகராட்சியாக மாற்றப்பட்டுள்ள காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு முதல்முறையாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.

மாநகராட்சி ஆணையர் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள் என தேர்தல் அலுவலர்களாக 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வேட்புமனு தாக்கல் செய்யும் அறை மற்றும் மாநகராட்சி அலுவலகம் முழுவதும் சிசிடிவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சி அலுவலகத்தில் வழிகாட்டி நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு போலீசாரின் பாதுகாப்புடன் வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யும் இடமான காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி திடீர் ஆய்வு செய்து சோதனை மேற்கொண்டார்.

வேட்பு மனு தாக்கல் செய்யும் அறைகள், சிசிடிவி கட்டுபாட்டு அறை, உள்ளிட்டவற்றை பார்வையிட்டு மாநகராட்சி அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினார்.

மாவட்ட ஆட்சியரின் ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் நாராயணன் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

No comments

Thank you for your comments