விபத்து சிக்கி உயரிழந்த காவலருக்கு சக காவல் துறையினர் நிதி உதவி...
காஞ்சிபுரம்;
சரண்ராஜ் ( காவலர்-2340), வயது 31 காஞ்சிபுரம் மாவட்டம் காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தவர் கடந்த 15.10.21 அன்று பணிக்கு செல்லும்போது விபத்து சிக்கி தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 21/10/2021 அன்று சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துவிட்டார்.... இந்நிலையில் சக காவலர்கள் நிதி உதவி அளித்துள்ளனர்.
இதுகுறித்து அவரது மனைவி தெரிவித்தாவது,
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம், உத்திரமேரூர் போஸ்ட், சின்ன நாராசம் பேட்டை தெரு நம்பர் 5 வசித்து வரும் திரு.குமார் - திருமதி கோமளா அவர்களின் மூத்த குமாரரும் எனது கணவருமாகிய தெய்வத் திரு சரண்ராஜ் ( காவலர்-2340), வயது 31 காஞ்சிபுரம் மாவட்டம் காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தவர் கடந்த 15.10.21 அன்று பணிக்கு செல்லும்போது விபத்து சிக்கி தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 21/10/2021 அன்று சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துவிட்டார்....
இதனை அறிந்து எங்களின் குடும்ப சூழ்நிலை கருதியும் எனது குழந்தைகளின் எதிர்காலம் எண்ணியும் எனது கணவர் தெய்வத் திரு சரண்ராஜ் அவர்களுடன் தமிழகம் முழுவதும் உள்ள 2013 ஆண்டில் பணியில் சேர்ந்த காவலர்கள் அனைவரும் Telegram மற்றும் What's app போன்ற சமுக வலைதளங்களில் ஒன்றினைந்து அவர்கள் விருப்பபட்டு எங்கள் குடும்பத்திற்கு உதவி உள்ள மொத்த தொகை 10 லட்சம் ரூபாய் ஆகும்.... இதில் பொற்கொடி, சரண்ராஜ் மகள் ஹேமதர்ஷினி க்கு ரூபாய் 200000 யில் ( இரண்டு லட்சம் ரூபாய் ) ஓரு LICயும் ரூபாய் 5,17,324 ( ஐந்து லட்சத்து பதினெழையிரத்தி முன்னுற்று இருவற்று நான்கு ) ரூபாயில் ஒரு LIC பாலிசியும் மற்றும் ரூபாய் 2,00,000/- ( இரண்டு லட்சம் ) ரூபாய்க்கு KVP திட்டமும் எனது மாமியார் FD ரூபாய் 50000 ( ரூபாய் ஐம்பதாயிரம் )
மாமனார் மாமியார் ரூபாய் 32366 ( ரூபாய் முப்பத்து இரண்டாயிரம் முன்னுன்று அறுபது ஆறு )ஆக மொத்தம் 10,00,000 ரூபாய் திரு. P. மனோபாலன் அவர்களின் ஆக்சிஸ் வங்கி கணக்கு எண்ணிலிருந்து ( A/C NO : 918010014538372, IFSC CODE : UTIB0000090, BRANCH : PAPPANAICKAN PALAYAM, CBE ) எனது வங்கி கணக்கு எண்ணான பாரத ஸ்டேட் வங்கி கணக்கு ( SBI ACCOUNT 40607314829, BRANCH :UTHIRAMERUE, IFSC CODE: SBIN0010510, MICR :600002227), க்கு 29.01.2022 அன்று வரவு வைக்கப்பட்டது....
எனது கணவரை இழந்து எங்களின் எதிர்காலத்தை எண்ணி கவலை அடைந்திருந்த இந்த நிலையில் எனது கணவருடன் பணியில் சேர்ந்த அனைத்து காவலர்களும் ஒன்றினைந்து அவர்கள் விருப்பபட்டு கொடுத்து உதவிய இந்த தொகை எங்கள் குடும்பத்திற்கு பேருதவியாக இருக்கிறது...
எனது குழந்தையின் எதிர்காலம் கருதி எனது கணவருடன் பணிக்கு சேர்ந்த காவலர்கள் அனைவராலும் செய்து தரப்பட்ட LIC மற்றும் KVP திட்டங்களை அதன் முதிர்வு காலம் வரை நாங்கள் ரத்து செய்ய மாட்டோம் என்றும் , ஆண்டுக்கு ஒரு முறை தங்களால் செய்து தரப்பட்ட காப்பீடுகள் அனைத்தும் இயக்கத்தில் இருக்கின்ற நிலைமையை உங்களிடம் தகவல் தெரிவிக்கின்றோம் என்று சுய நினைவுடன் உறுதி அளிக்கிறேன்....
வருங்காலத்தில் இந்த உதவி தொகை சம்பந்தமாக எனக்கோ எங்களின் மாமனார் குடும்பத்தினருக்கோ எந்த விதமான கருத்து வேறுபாடு இருக்காது என்றும், அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த உதவி தொகையை திரும்பப் பெற சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று சுயநினைவோடு ஒப்புக்கொள்கிறேன்... இவ்வாறு தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments