Breaking News

நியாயவிலைக் கடையில் பணியாளர்கள் பற்றாக்குறை... பொதுமக்கள் பெரும் அவதி...

 காஞ்சிபுரம் 

காஞ்சிபுரம் வெங்கடாபுரம் நியாயவிலைக் கடையில் பணியாளர்கள் பற்றாக்குறை

100க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்க நீண்ட நேரம் காத்திருக்கும் அவலம்

ஒரே நேரத்தில் அதிகளவில் பொது மக்கள் குவிந்துள்ளாதல் நோய் தொற்று பரவும் அபாயம்

உரிய நடவடிக்கை மேற்கொள்ள  மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுப்பு

காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு அருகே வெங்கடாபுரம் கிராமத்தில்  நியாயவிலைக்  கடை செயல்பட்டு வருகிறது. இந்த நியாயவலைக் கடையில் சுமார் 400 குடும்ப அட்டைகள் உள்ளது. 

இந்நிலையில்  இம்மாதத்தின் கடைசி நாள் இன்று என்பதால் இம்மாதத்தில் ரேஷன் பொருட்களை வாங்காத  சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர்  பொருட்களை வாங்க ஒரே நேரத்தில் குவிந்தனர். மேலும் இக்கடையில் ஒரே ஒரு பெண் பணியாளர்  மட்டுமே பணி செய்து வருவதால் ரேஷன் பொருட்களை வாங்க வந்தவர்கள் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட  நீண்ட வரிசையில் காத்திருந்து  பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். 

மேலும்  ஒரே ஒரு பணியாளர் மட்டுமே பணிப்புரிவதால் குடும்ப அட்டைதாரர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் தற்போது கொரோனா அதிகரித்து வரும் இச்சூழலில் பல மணி நேரங்களக ஒரே இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியிருந்து சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொருட்களை வாங்கி  செல்வதால் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக இந்த நியாயவிலைக் கடைகளில் உடனடியாக கூடுதலாக பணியாளர்களை நியமித்து உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் உடனடியாக  எடுத்திட  வேண்டும் என இப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

Thank you for your comments