Breaking News

மக்கள் குறைதீர் கூட்டம் மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவு - ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். 

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், துணை ஆணையர் (கலால்) பி.சுபாநந்தினி, துணை இயக்குநர் நிலஅளவை தவமணி, சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் முருகேசன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ராம்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை பொதுமக்கள் மாவட்ட    ஆட்சித் தலைவரிடம் அளித்தனர். 

பொதுமக்களிடமிருந்து 58 இலவச வீடு, 50 வீட்டுமனைப்பட்டா, 42 வேலைவாய்ப்பு, 99 இதர மனுக்கள் என மொத்தம் 249 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர்  சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். 

அதனைத்தொடர்ந்து, கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 5 முன்களப் பணியாளர்களின் குடும்பத்தாருக்கு மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.25 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., வழங்கினார்.

No comments

Thank you for your comments