எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிட மனு
கோயமுத்தூர்:
கோயமுத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கொரோனா பரவலை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இது குறித்து தெரிவிக்கையில் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் உயிரிழப்புகளையும் கொரோனா பரவலையும் தடுத்து மாவட்ட மக்களை பாதுகாக்க வேண்டும். மருத்துவமனைகளில் கூடுதலாக ஆக்சிஜன் படுக்கை வசதிகளை ஏற்படுத்துதல், ஆம்புலன்ஸ் காத்திருப்பினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் ரூ.151 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி நிர்வாகத்தினால் ரத்து செய்யப்பட்டது. மக்கள் நலன் கருதி மீண்டும் அந்தத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். சுகுணாபுரம் பகுதியில் நடமாடும் சிறுத்தைப்புலி இதுவரையில் பிடிபடவில்லை எனவே வனத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் விரைவாக செயல்பட்டு சிறுத்தை புலியை பிடித்து மீண்டும் வனப் பகுதியில் விடவேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் செ. தாமோதரன், பிஆர்ஜி அருண்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் கே. அர்ஜுனன், வி.பி கந்தசாமி, அமுல் கந்தசாமி, பாரதிய ஜனதா எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
#கோவை மாவட்டத்தில் அதிகரித்து வரும் #COVID19 பெருந்தொற்று பரவலை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கோவை மாவட்ட கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து மாவட்ட ஆட்சியர் திரு. சமீரன் அவர்களிடம் மனு அளித்தோம். pic.twitter.com/kO7T04FMcl
— SP Velumani (@SPVelumanicbe) January 11, 2022
@V_Jayaraman123 @AmmanKArjunan @PRGArunkumar @MLA_SulurOffl @kr_jayaram @VanathiBJP @AIADMKOfficial #AIADMK pic.twitter.com/44uoRVLbSv
— SP Velumani (@SPVelumanicbe) January 11, 2022
No comments
Thank you for your comments