பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு
கோவை, ஜன.13-
பெண்கள் பாதுகாப்பு குறித்தும் மற்றும் கொரோணா மற்றும் ஒமைக்ரான் நோய் தொற்று குறித்தும் மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வு அளித்தனர்..
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் மதுக்கரை, க.க.சாவடி மற்றும் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் துறையினர் அரசு மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தை திருமணம், போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்,
சக மாணவ மாணவிகளிடையே ராக்கிங் செய்வதால் ஏற்படும் விளைவுகள், குற்றங்களை தடுப்பது பற்றியும், போக்சோ, சிசிடிவி கேமரா பொருத்துதல், சாலை விதிகளை பின்பற்றுவது பற்றியும், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம், பூட்டிய வீட்டை பாதுகாப்பதற்கு காவல் துறையினரால் அறிமுகம் செய்த சகோ செயலி பற்றியும், முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவும் தீவிரம் பற்றியும், விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
No comments
Thank you for your comments