Breaking News

தமிழகத்தில் கொரானோ வைரஸ் தொற்று பரவல் வீதம் குறைகிறதா? கூடுகிறதா?

 சென்னை, ஜனவரி 12,

தமிழகத்தில் கொரானோ வைரஸ் தொற்று விகிதம் சென்ற வாரத்தை விட நடப்பு வாரத்தில் குறைந்து வருகிறது.



ஆனால் பொங்கல் விடுமுறையை ஒட்டி மீண்டும் கொரானோ வைரஸ் தொற்று நோய் அதிகரிக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஒரு நோயாளி எத்தனை பேருக்கு புதிதாக வைரசை பரப்புகிறார் என்பது தொற்று விகிதம் என்று கூறப்படுகிறது.


தொற்று விகித எண் ஆர் நாட் அல்லது ஆர் 0 என்று அழைக்கப்படுகிறது.

ஆர் 0 எண் 2 என்றால் ஒரு கொரோனா வைரஸ் நோயாளி 2 பேருக்கு புதிதாக கொரானோ வைரஸை பரப்புகிறார் என்று பொருள்.

தமிழ்நாட்டில் ஆங்கில வருடப்பிறப்பு சமயத்தில் ஆர் 0 எண் 3.7 ஆக இருந்தது. இதன் பொருள் ஒரு வைரஸ் நோயாளி 3.7 பேருக்கு வைரஸை பரப்ப வாய்ப்பு உள்ளது என்று அர்த்தம்.

தற்பொழுது ஜனவரி 2ம் வாரத்தில் இந்த ஆர் 0 எண் 2.9 ஆக குறைந்துள்ளது.

தற்பொழுது தமிழகத்தில் 100 பேருக்கு ஆர்டிபிசிஆர் சோதனைகள்  நடந்தால் அந்த 100 பேரில் 4.5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுகிறது.

சென்னையைப் பொருத்தமட்டில் இந்த பாசிட்டிவிட்டி எண் 10 ஆக ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

ஆனால் திண்டுக்கல், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் இந்த பாசிட்டிவிட்டி எண் ஒன்றுக்கும் குறைவாக உள்ளது.

சென்னையில் பாசிட்டிவ்விட்டி எண்  உயராத நிலையில் ஆர் 0 எண் குறைவது நல்ல அறிகுறியாகும்,

ஆனால் பொங்கல் விடுமுறை நாட்களிலும் இந்த விடுமுறை நாட்களில் சென்னை போன்ற நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு மக்கள் செல்வதும் பெரிய அச்சத்தைத் தருவதாக உள்ளது.

சென்னையிலிருந்து கிராமங்களுக்குச் செல்வோர் கிராமங்களில் வைரஸ் தொற்றை பரப்ப வாய்ப்பு உள்ளது.

கிராமங்களில் வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் நகரங்களுக்கு திரும்பும்பொழுது நகரங்களில் மீண்டும் வைரஸ் தொற்று அதிகரிக்கக் கூடும்.

இதனைக் கட்டுப்படுத்துவது பொதுமக்கள் கையில்தான் உள்ளது அவர்கள் முகக் கவசம் தொடர்ந்து அணிய வேண்டும் ஒருவருக்கொருவர் குறைந்தபட்சம் சமூக இடைவெளியைப் பராமரிக்கவேண்டும்.

அதன்மூலம் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தலாம்.

வைரஸ் தொற்று குறைந்தாலும் வைரஸுக்கான சோதனைகளை குறைக்க கூடாது.

தமிழ்நாட்டில் துவக்கத்திலிருந்தே ஆர்டிபிசி ஆர் சோதனைகள் தான் செய்யப்படுகின்றன.

இப்பொழுது சிறப்பான ஆண்டிஜன் சோதனைகள் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி முடிவை உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.

ஆன்டிஜென் சோதனைகள் புதிய ஒமைக்ரான் வைரஸ் தொற்றை கண்டறியப் போதுமானவை என்று உலக சுகாதார நிறுவனத்தின் அறிவியல் நிபுணர் சௌமியா சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தகுந்தது.

No comments

Thank you for your comments