Breaking News

ஸ்ரீ நாகசக்தி அம்மன் சமூக அறக்கட்டளை சார்பாக வேட்டி சேலை வழங்கல்...

கோவை :

 கோவை மலுமிச்சம்பட்டி ஸ்ரீ நாகசக்தி அம்மன் சமூக அறக்கட்டளை சார்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேஷ்டி துண்டு சேலை வழங்கும் நிகழ்ச்சி  சித்தர் ஜகத்குரு ஸ்ரீ பாபுஜி சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.

சித்தர் ஜகத்குரு ஸ்ரீ பாபுஜி சுவாமிகள் தெரிவித்ததாவது,  

ஊரடங்கு காரணமாக பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுமக்களுக்கு அறக்கட்டளை சார்பாக தினமும் 300 நபர்களுக்கு உணவளித்து வருகிறோம் மற்றும் பண்டிகை காலங்களில் இலவச வேஷ்டி துண்டு சேலைகள் மற்றும் மருத்துவப் பொருள்கள் பல்வேறு சேவைகளை கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி நாகசக்தி அம்மன் சமூக ஆன்மீக அறக்கட்டளை செய்து வருகிறது.

அனைவரும் கொரோனா நோய் தொற்றிலிருந்து  பாதுகாத்துக் கொள்ள நிலவேம்பு கசாயம் பருகுமாறு அறிவுறுத்தப்பட்டது.....

இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை செயலாளர் கணேஷ்குமார், கேபி, முருகன், நாச்சிமுத்து, வனஜா, மாவாசுகி, தங்கமணி சரஸ்வதி, மாதாஜி பாக்கியலட்சுமி, உமா மகேஸ்வரி,கவிதா மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments