Breaking News

ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் அறிவிப்பு

ஈரோடு, ஜன.6-

ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறை அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம்  மற்றும்கருத்தரங்கம் நடைபெறவுள்ளது என்று  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார். 

அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் விரைவாகவும் முழுமையாகவும் நடைபெறத் துணைபுரியும் வகையில் மாவட்டந்தோறும் உள்ளஅனைத்துத் துறைஅலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு “ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம்” நடத்திட அரசு ஆணையிடப்பட்டுள்ளது.

அதற்கிணங்க ஈரோடு மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர் மற்றும் பணியாளர்களுக்குப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் 27.01.2022, 28.01.2022 ஆகிய இரண்டு நாள்களில் காலை 10.00 மணியளவில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள 2-ஆம் தளக் கூட்டஅரங்கில் நடைபெறவுள்ளன.  

இப்பயிலரங்கில் தமிழ் வளர்ச்சித் துறைஉயர் அதிகாரிகள் கலந்து கொண்டு பயிற்சியளிக்க உள்ளார்கள். இப்பயிலரங்குமற்றும் கருத்தரங்கில் ஒவ்வொரு அலுவலகத்திலிருந்தும் கண்காணிப்பாளர் நிலையில் ஒருவரும் உதவியாளர் அல்லது இளநிலை உதவியாளர் நிலையில் ஒருவரும் பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுன்ணி தெரிவித்துள்ளார்.


No comments

Thank you for your comments