Breaking News

போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு.... குறும்படம் போட்டியில் முதல் இடத்தை பிடித்த காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை

காஞ்சிபுரம்:

தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களால் நடத்தப்பட்ட போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு குறும்படப் போட்டியில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையின் குறும்படம் முதல் இடத்தை பெற்றுள்ளது..

தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநர் டாக்டர் சி.சைலேந்திரபாப  அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் போதைபொருட்களுக்கு (Narcotics) எதிரான விழிப்புணர்வு குறும்படப்போட்டி அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மேற்படி தலைப்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.எம்.சுதாகர் அவர்கள் தயாரித்த "மௌனம் கலைவோம்" என்ற தலைப்பில் அமைந்த போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு குறும்படம் முதல் இடத்தை பெற்றுள்ளது. அதில் போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் சமூகத்தில் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் குற்றங்களை விளக்குவதாக அமைந்து பொதுமக்களிடமும், எதிர்கால இளைஞர்களிடையேயும் போதைபொருட்களின் தீமைகளை உணர்த்தி, அவை சமுதாயத்திலிருந்து முற்றிலும் களையப்படும்வண்ணம் செயல்படுவதை தூண்டும்படியும், ஊக்கமளிக்கும் வண்ணமும் அனைத்து பெற்றோர்களின் நன்மதிப்பை பெறும் வகையிலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

போதைப்பொருட்கள் கடத்துவது, விற்பனை செய்வது மற்றும் உபயோகிப்பது போன்ற செயல்களில் எவரேனும் ஈடுபட்டால் பொதுமக்கள் உடனடியாக 10581 என்ற எண்ணிலோ அல்லது 9498410581 என்ற WhatsApp எண்ணிலோ தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர்களின் விவரம் முற்றிலும் இரகசியமாக பாதுகாக்கப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments