Breaking News

மக்களுக்கு நன்றி தெரிவித்த முன்னாள் அமைச்சர்!

நாமக்கல், ஜன.3-

நாமக்கல் மாவட்டம் குமராபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர்  தங்கமணி எம்எல்ஏ 30,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையொட்டி அவர் தனது தொகுதியில் உள்ள வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார் . 

இந்த நிலையில் அவர் பள்ளிபாளையம் ஒன்றிய பகுதிகளில் திறந்த வேனில் சென்று வாக்காளருக்கு நன்றி தெரிவித்து வந்தார். அதன்படி மாலை 3 மணி அளவில் புது மண்டபத்துர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.  அப்போது பல இடங்களில் பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். 

அவருடன் ஒன்றிய அதிமுக செயலாளர் செந்தில். எலந்தகுட்டை பஞ்சாயத்து தலைவர் வெங்கடாசலம் மாதேஸ்வரன் திருமூர்த்தி. கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர். 

புது மண்டபத்து கிளை  உறுப்பினர்கள் வரவேற்பளித்தனர். செல்வநாதன் வேதமுத்து, சாமி ஆத்தாள், விக்டர் ராஜதுரை, எட்வர்ட் துரை,  அய்யாவு, வின்சென்ட், கட்சி நிர்வாகிகள் வரவேற்பளித்தனர்.

No comments

Thank you for your comments