எலச்சிபாளையத்தில் பிச்சை எடுக்கும் போராட்டம்!
நாமக்கல்.ஜன.3-
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளர் நிரந்தரமாக நியமிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொதுமக்களிடம் பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மூலம் கடந்த தீபாவளி அன்று கைது செய்யப்பட்டார். அதற்கு பிறகு தற்போது வரை நிரந்தரமாக வருவாய் ஆய்வாளர் நியமிக்காததால் இப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் அரசு நலத்திட்டங்கள் மற்றும் சான்றிதழ் பெறுவதில் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.
இது சம்பந்தமாக கோரிக்கை மனு ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன இதன் பின்னர் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாததால் தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் எலச்சிபாளையத்தில் வருவாய் ஆய்வாளரை நிரந்தரமாக நியமிக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி கடைவீதிகளில் பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு கட்சியின் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.வெங்கடாசலம் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ந.வேலுசாமி ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ் கிழக்கு ஒன்றிய செயலாளர் வீ.தேவராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு இயக்குனர் பி.மாரிமுத்து
ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ரமேஷ் கிட்டுசாமி, சக்திவேல். ஈஸ்வரன், ரகமத், கிளை செயலாளர்கள் சந்திரன், கந்தசாமி, லட்சுமி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments