புனித அன்னை தெரேசா மனித நேய அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா
வேலூர்
வேலூர் மாவட்டம் காட்பாடி கல்புதூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புனித அன்னை தெரேசா மனித நேய அறக்கட்டளை சார்பில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு மற்றும் பொங்கல் முப்பெரும் விழா மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதற்கு தலைமை பொறுப்பை ஏற்றுள்ள அறக்கட்டளை நிறுவனர் தலைவர் டாக்டர் செல்வி விஜய பானு, செயலாளர் செல்வி ஜெயபிரதா முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பெங்களூர் ருத்ர சபா பவுண்டேஷன் நிறுவன தலைவர் டாக்டர் ஸ்ரீ சத்ய குரு பிரகாஷ் குருஜி சிறப்புரையாற்றினர். மேலும் இதில் கலந்து கொண்ட பொதுமக்களும் அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள் பரதநாட்டியம் மற்றும் நடனமாடி அனைவரையும் கவர்ந்தனர். மேலும், அனைவரும் மகிழ்ச்சியுடன் அங்கு வழங்கப்பட்ட இரவு உணவை வாங்கி சென்றனர்.
No comments
Thank you for your comments