Breaking News

திமுக சார்பில் மாமன்ற தேர்தல் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல்

ஈரோடு:

ஈரோடு மாநகராட்சி மாமன்ற தேர்தல் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது. 

ஈரோடு கருங்கல்பாளையம் 39-வது வார்டு திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்து நேர்காணலில் கலந்து கொண்ட எஸ்.கீதாஞ்சலி செந்தில்குமாரை தமிழக  வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் நேர்காணல் நடத்தினார். 

இந்த நேர்காணலில் அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவக்குமார், மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம்,  மாநகர செயலாளர் மு.சுப்ரமணியம் ஆகியோர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


No comments

Thank you for your comments