Breaking News

வாகன திருடன் கைது - 5 வாகனங்கள் பறிமுதல்

வேலூர், ஜன.24-

வேலூர் மாவட்டத்தில் சின்ன அல்லாபுரம் கே.கே. நகரைச் சேர்ந்த  சசிக்குமார் என்பவர், கடந்த  ஒரு வருடமாக பாகாயம் தெற்கு காவல் நிலையம், அரியூர் காவல் நிலையம், வடக்கு காவல் நிலையம், விரிஞ்சிபுரம் காவல் நிலையம், பள்ளிகொண்டா காவல் நிலையம், அணைக்கட்டு காவல் நிலையம், வேப்பங்குப்பம் காவல்நிலையம் எல்லைகளில் தொடர்ச்சியாக இரு சக்கர வாகனத்தை திருடி வந்தார். 

இந்நிலையில், துத்திப்பட்டு சந்திப்பில் காலை நேரத்தில், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த அணைக்கட்டு பகுதியை சேர்ந்த சதீஷ் குமார் என்பவரை  வழிமறித்து மிரட்டி பாக்கெட்டில் வைத்திருந்த பணம் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறித்து கொண்டு தலைமறைவானர் சசிக்குமார்.

இத்தகவலையடுத்து பாகாயம் காவல் உதவி ஆய்வாளர் ஜி.ரவிச்சந்திரன் மற்றும் காவலர்களும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு மாலை 5 மணிக்குள் தொரப்பாடி எம்ஜிஆர் சிலை அருகில்  சசிக்குமாரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.  மேலும் எதிரி சசிகுமார் இடமிருந்து 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

No comments

Thank you for your comments