ஈரோடு கோபியில் இந்து அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்டம்...
ஈரோடு:
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி லாவண்யா பெண் கட்டாய மதமாற்றத்திற்கு தூண்டி துன்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டதை கண்டித்தும், தற்கொலைக்கு காரணமான கிறிஸ்துவ மிஷனரிகளை கைது செய்யக்கோரியும் இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாரதிய ஜனதா கட்சி, இந்துமுன்னணி, பாரதிய மஸ்தூர் சங்கம் ஆகிய இந்து அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஈரோடு வடக்கு மாவட்ட கோபிசெட்டிபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணிமாநில செயலாளர் வி. எஸ். செந்தில் குமார் கலந்து கொண்டார். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் வி. சி. அஜித் குமார் சிறப்புரையாற்றினார்.
இந்து முன்னணி ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் குருசாமி, மாவட்ட பொதுச்செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட துணைத்தலைவர் குமார், பாரதிய மஸ்தூர் சங்க ஈரோடு மாவட்ட செயலாளர் வக்கீல் சங்கர், பாரதிய ஜனதா கட்சி ஈரோடு வடக்கு மாவட்ட ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் விஜய், அமைப்புசாரா பிரிவு மாவட்ட தலைவர் ரமேஷ், மாநில மாவட்ட மண்டல் நகர நிர்வாகிகள் மற்றும் ஏராளமான இந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments