சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கு சென்று பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார் மாவட்ட ஆட்சியர்
ஈரோடு:
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், குப்பம்பாளையம் ஊராட்சி, ராசாம்பாளையம் பகுதியில் வசிக்கும் சுதந்திர போராட்ட தியாகி திரு.கே.கே.முத்துசாமி அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று கதர்சால்வை அணிவித்து கெளரவப்படுத்தினார்.
73-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வயது மூப்பினை கருத்தில் கொண்டு, கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாக மாவட்டந்தோறும் சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொன்னாடை போர்த்தி, உரிய மரியாதை செலுத்த தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அவர்கள் ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், குப்பம்பாளையம் ஊராட்சி, ராசாம்பாளையம் பகுதியில் வசிக்கும் சுதந்திர போராட்ட தியாகி திரு.கே.கே.முத்துசாமி அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று கதர்சால்வை அணிவித்து கெளரவப்படுத்தினார்.
No comments
Thank you for your comments