Breaking News

காங்கிரஸ் சார்பாக 73வது குடியரசு தின விழா கொடியேற்றம் மற்றும் சிறு கருத்தரங்கம்

ஈரோடு:

காங்கிரஸ்  சார்பாக  73வது குடியரசு தின விழா கொடியேற்றம் மற்றும் சிறு கருத்தரங்கம் நடைபெற்றது... 



ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஈரோடு  மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில்   26-01-2022 அன்று,  ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.பி்.ரவி தலைமையில் மகாத்மா காந்தி அவர்களின்  உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற  உறுப்பினருமான இ.திருமகன் ஈவெரா அவர்கள் தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் ஜெ.சுரேஷ் முன்னிலை வகித்தார். 

அதைத்தொடர்ந்து  கருங்கல்பாளையத்தில் உள்ள மகாத்மா காந்தி திருவுருவ சிலைக்கு ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இ.திருமகன் ஈவெரா அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

மேலும் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.பி.ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சேவாதள  தலைவர் எஸ்.முகமது யூசுப் தலைமை தாங்கினார். காங்கிரஸின் மூத்த தலைவர் ஆர் பச்சையப்பன் இனிப்புகளை வழங்கினார்.   

அதன்படி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் சிறு கருத்தரங்கம் நடைபெற்றது.     ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இ. திருமகன் ஈவெரா அவர்கள் குடியரசு தினவிழாவின் சிறப்புகளை  சிறப்புரை ஆற்றி விட்டு 1950 லிருந்து 2021 வரை  குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்டு பாசறை திரும்பும் படை வீரர்களுக்கான  மகாத்மா காந்திஜிக்கு மிகவும் பிடித்த  அபைட் வித் மி (Abide with me )  பாடலை இந்த ஆண்டு, மத்தியில் ஆளும் பாசிச பாஜக மோடி அரசு ரத்து செய்ததற்கு மாபெரும் கண்டனத்தை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் ஈ.ஆர் ராஜேந்திரன், துணை தலைவர்களான பா. ராஜேஷ் ராஜப்பா, கே.புனிதன் பாபு என்கிற வெங்கடாஜலம், அம்மன் மாதேஸ்வரன், பாஸ்கர் ராஜ், ஆர் கே பிள்ளை, பொதுச் செயலாளர்களான டி.கண்ணப்பன் எம் ஆர் அரவிந்தராஜ், இரா. கனகராஜ், ஏ. வின்சென்ட், வெல்டிங் கோபால், கராத்தே யூசுப், மாவட்ட விவசாயப் பிரிவு தலைவர் பி.ஏ.பெரியசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் எம் ஜவஹர் அலி, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ஆர். புவனேஸ்வரி, மாவட்ட எஸ்சி பிரிவு தலைவர் கே.பி.சின்னசாமி, மாவட்ட NCWC காங்கிரஸ் தொழிலாளர் கமிட்டியின் தலைவி ஆர். கிருஷ்ணவேணி, மாவட்ட மகிளா காங்கிரஸ் நிர்வாகி ஆர் சுதா, நெசவாளர் அணி மாவட்ட தலைவர் சி. மாரிமுத்து,  தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சி எம் ராஜேந்திரன், வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி வழக்கறிஞர் எம்.முருகானந்தம்,  ஆடிட்டர் ஆர் எல் சிவாஜி, மண்டலத் தலைவர்களான ஆர்எஸ் ஐ அய்யூப் அலி என்கிற அம்புலி, ஆர்.விஜயபாஸ்கர்,  டி. திருச்செல்வம், எச் எம். ஜாபர் சாதிக், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் ம.முகமது அர்சத், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவர் கே என் பாஷா, மாவட்ட செயலாளர்களான  சூரம்பட்டி பிரகாஷ், ராஜாஜிபுரம் சிவா, மா.திருவேங்கடம், முன்னாள் நகர தலைவர் குப்பண்ணா சந்துரு, மொடக்குறிச்சி வட்டார முன்னாள் தலைவர் வி எம் கே செந்தில் ராஜா, முன்னாள் ஈரோடு பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே விஜய் கண்ணா, ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செந்தூர் ராஜகோபால், மேற்கு சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் சிட்டி  கல்கி, மேற்கு சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் திண்டல் பாலாஜி, தம்பி கார்த்தி, வார்டு தலைவர்களான வேணுகோபால், குருசாமி,  சிவா என்கிற சிவகுமார், சந்தோஷ், 4 ஆம் மண்டல சிறுபான்மை துறை தலைவர் சூர்யா சித்திக், மாப்பிள்ளை மீரான், வெற்றிச்செல்வன், லயன் முகமது  இப்ராஹிம், லக்காபுரம் ஜூபேர் அஹமது, வீரப்பன் சத்திரம் சண்முகம், ராஜாஜிபுரம் குமரேசன், சிவாஜி மன்ற கோபி முருகேஷ், சிவாஜி ரசிகர் மன்ற தலைமை நிர்வாகி வள்ளிப்புரத்தான் பாளையம் எஸ் தங்கவேலு, நரிப்பள்ளம் ரவிச்சந்திரன் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments