Breaking News

காட்பாடி ரயில் நிலையத்தில் போலீஸார் தீவிர சோதனை

குடியரசு தின பாதுகாப்பையொட்டி காட்பாடி ரயில் நிலையத்தில் போலீஸார் தீவிர சோதனை செய்கின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 600 போலீஸார் ஈடுபட உள்ளனர். 

குடியரசு தினத்தில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்கள், ரயில், பஸ் நிலையங்கள், கோவில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

காட்பாடி ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. அனைத்து ரயில்களில் போலீஸார் சோதனை நடத்தினர்.

மேலும் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மெட்டல் டிடக்டர் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். பயணிகள் கொண்டு வரும் உடமைகளையும் ரயில்வே போலீஸார் சோதனை நடத்தினர்.

தொடர்ந்து 3 நாட்கள் இந்த சோதனை நடைபெறும் என போலீஸார் தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments