காட்பாடியில் புதிய திரையரங்கம் "செல்வம் ஸ்கொயர் (ஐநாக்ஸ்)" திறந்து வைத்தார் எம்.பி., டி.எம்.கதிர் ஆனந்த்
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி திருவலம் செல்லும் சாலையில் செல்வம் நகர் பகுதியில் "செல்வம் ஸ்கொயர் (ஐநாக்ஸ்)" திரையரங்கம் புதிதாக கட்டப்பட்டு இன்று கோலாகலமாக திறப்பு விழா நடைபெற்றது.
இந்த திறப்புவிழாவில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த், விஐடி பல்கலைக் கழக வேந்தர் ஜி விஸ்வநாதன், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், திரைப்பட நடிகர் ஜெயபிரகாஷ், இராணிப்பேட்டை ஜி.கே.குழுமம் சந்தோஷ் காந்தி ஆகியோர் பங்கேற்று ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திரையரங்கை திறந்து வைத்தார்கள்
இந்த திரையரங்கானது மல்டிபிளக்ஸ் 3 ஸ்கிரீன் மற்றும் 200 இருக்கைகள் கொண்டது.
இந்நிகழ்ச்சியில் திரையரங்கு உரிமையாளர் செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் திரையரங்கு ஊழியர்கள், பகுதி கழக செயலாளர்கள் ஜி.வன்னியராஜா, எம்.சுனில்குமார், ஒன்றிய குழுத்தலைவர் வேல்முருகன் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
No comments
Thank you for your comments