கொரோனா தடுப்பு பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை
முன்களப் பணியாளர் என்ற முறையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கொரோனா தடுப்பு பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டார்.
சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் கோவிட் தடுப்பூசித் திட்டத்தை (Precaution Dose) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று(10-01-2022) தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கெனவே 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
இந்நிலையில் சென்னை காவேரி மருத்துவமனையில் பூஸ்டர் டோஸ் கோவிட் தடுப்பூசியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செலுத்திக்கொண்டார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாவது,
முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று #BoosterDose எடுத்துக் கொண்டேன். அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள். தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்!
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இன்றைய நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழுிலன், டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று #BoosterDose எடுத்துக் கொண்டேன்.
— M.K.Stalin (@mkstalin) January 11, 2022
அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள்.
தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்! pic.twitter.com/8ALfypb2Uh
No comments
Thank you for your comments