Breaking News

செங்கரும்பு கட்டுகளால் செய்யப்பட்ட காளை மாடுகளுடன் பொங்கல் விழா

காஞ்சிபுரம்

செங்கரும்பு கட்டுகளால் செய்யப்பட்ட காளை மாடுகளுடன் காஞ்சிபுரத்தில் பொங்கல் விழாவைக் கொண்டாடிய விவசாய குடும்பத்தினர்.

தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகையின் சிறப்பையும், விவசாயத் தொழிலில் அழிந்து வரும் காளை மாடுகளின் பயன்பாட்டினை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் விவசாயிகளையும், விவசாய தொழிலே சிறப்பிக்கும் வகையில்

காஞ்சிபுரம் அருகேயுள்ள கீழ்கதிர்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனது  வீட்டின் அருகே  செங்கரும்பு கட்டுகளால்  செய்யப்பட்ட காளை மாடுகளை வைத்து புதுப்பானையில் பொங்கல் வைத்து தனது குடும்பத்தினருடன் வித்தியாசமான வகையில் தை பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்கள்.

விவசாயிகளையும், காளை மாடுகளை சிறப்பை விளக்கும் வகையில் அமைக்கப்பட்ட செங்கரும்பு காளைமாடுகளை கிராம மக்கள் ஏராளமானோர் ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு சென்றனர்.








No comments

Thank you for your comments