Breaking News

பிரதமர் பாதுகாப்பு குளறுபடி பாஜக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

கோவை, ஜன.14-

கோவை மாவட்டம் டாடாபாத் பகுதியில் பாரதப் பிரதமர் மோடிக்கு உரிய பாதுகாப்பு அளிக்காத பஞ்சாப் மாநில அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் பிற்படுத்தப்பட்டோர் அணி மாவட்ட தலைவர் சுதாகர் மற்றும் தேசிய சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம்  ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.  

இதுகுறித்து வேலூர் இப்ராஹிம் தெரிவிக்கையில், நாட்டின் பிரதமருக்கு அளித்த பாதுகாப்பு பணியில் ஏற்பட்டுள்ள குளறுபடிக்கு பல மாநில முதல்வர்கள் பஞ்சாப் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் தமிழக முதல்வர் எவ்வித கண்டனம் தெரிவிக்கவில்லை. 

தமிழக பாரதிய ஜனதா தலைவர்களையும் தொண்டர்களையும் கட்சி பணிகளை செய்யவிடாமல் திமுக அரசு வழக்குகள் போட்டு கைது செய்கின்றனர். 


மதச்சார்பற்ற அரசு என்று கூறிக்கொள்ளும் திமுக இந்து கோவில்களை மட்டும் மூட உத்தரவிட்டு இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது  என தெரிவித்தார். இந்நிகழ்வில் பா.ஜ.க மாவட்ட தலைவர் நந்தகுமார் முன்னாள் எம்.பி கார்வேந்தன் மாவட்ட பொது செயலாளர் ரமேஷ், கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



No comments

Thank you for your comments