மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அலங்கார ஊர்தி காட்சி!
ஈரோடு, ஜன.28-
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை, தீவுத்திடலில் 26.01.2022 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை - குடியரசுதின அலங்கார அணிவகுப்பில் இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டு, அணிவகுப்பில் பங்கேற்ற மூன்று அலங்கார ஊர்திகளை கோயம்புத்தூர்,ஈரோடு மற்றும் மதுரைஆகிய மாவட்டங்களில் காட்சிப்படுத்தும் பொருட்டு கொடியசைத்து தொடங்கிவைத்தார்கள்.
மேலும், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த அலங்கார ஊர்திகளை வரவேற்று, பொதுமக்கள் பெருந்திரளாக பார்வையிட்டு பயன் பெறுகின்ற வகையில் நகரின் முக்கியப் பகுதிகளில் இவ்வூர்திகள் காட்சிப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.
இதில் முதல் அலங்கார ஊர்தியானது, பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் உயிருடன் காட்சி தரும் வகையில் வடிவமைக்கப்பட்டு மதுரை மாநகர் வண்டியூர் தெப்பக்குளம் அருகில் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படுகிறது. இரண்டாவது அலங்கார ஊர்தியானது, சுதந்திரப் போராட்ட வீரர்களை போற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டு கோவை மாநகர் வ.உ.சிதம்பரனார் பூங்கா அருகில் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படுகிறது.
மூன்றாவது அலங்கார ஊர்தியானது, சத்தியாகிரக அறப்போராட்டம் நடத்தியவரும், சமூக சீர்திருத்தத்திற்காகவும், பெண் விடுதலைக்காகவும் தீண்டாமையை வேரறுக்க அரும் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தைபெரியார், விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று ஒத்துழையாமை இயக்கம், சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட மூதறிஞர் இராஜாஜி, தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் முழங்கிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ஏழை எளியமக்கள் ஏற்றம் பெற்றிட எந்நாளும் உழைத்திட்ட கர்ம வீரர்காமராஜர், சமூகசீர்திருத்தச் செயல்பாட்டாளர் ரெட்டைமலை சீனிவாசன், கலெக்டர் ஆஷ் துரையை கொன்று தன்னுயிரை மாய்த்துக் கொண்ட வீரன் வாஞ்சிநாதன், அன்னியர்களை வீரமுடன் எதிர்த்து போரிட்டதீரன் சின்னமலை, கொடிகாத்த திருப்பூர்குமரன், விடுதலைக்காக முதன்மை பங்காற்றிய வரும் சிறந்த இலக்கியவாதியுமானதி ருச்சிராப்பள்ளி வ.வே.சு. ஐயர், அனைவராலும் போற்றப்பட்ட கண்ணியமிகு காயிதே மில்லத், அண்ணல் காந்தியடிகளின் பொருளாதாரப் பேராசிரியராகவும் சிறைத்தண்டனை பெற்றவருமான தஞ்சாவூர் ஜோசப் கொர்னேலியஸ் செல்ல துரைகுமரப்பா, தியாகச் சீலர்கக்கன் ஆகியோரின் புகழினை வெளிப்படுத்து கின்றவகையில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தியானது ஈரோடுமாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு இன்று (28.01.2022) முதல் 31.01.2022 வரை காட்சிப்படுத்தப்படுகிறது.
இந்த அலங்கார ஊர்தியினை பொதுமக்கள் காலை 9.30 மணிமுதல் மாலை 6.30 மணிவரை பார்வையிட்டு பயன்பெறலாம். தினசரி சுதந்திரப் போராட்ட வீரர்களை போற்றும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும் அலங்கார ஊர்தியினை காணவரும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியினை கடைபிடிக்கு மாறும் கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments