Breaking News

நண்பன் இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை?

திருவள்ளூர், ஜன.6-

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் அருகே நண்பன் இறந்த சோகத்தில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் திருப்பாச்சூர் கோட்டை காலனி கல்லறை தெருவில் வாசிக்கும் பாசூரான் - இரக்கம், என்பவர்களுக்கு, 2 பெண் பிள்ளைகள் மற்றும் மில்டன்( எ) அப்பு என்ற மகனும் உள்ளனர்.  பாசூரான் கூலி வேலை செய்து தனது மகள்கள் மற்றும் மகனை கல்லூரிக்கு அனுப்பி படிக்க வைத்து வருகிறார்.

இந்த நிலையில் ஆவடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் மில்டன்  பிகாம் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார், அதே கல்லூரியில் பயின்ற அரக்கோணம் புளியமங்கலம் பகுதியைச் சேர்ந்த  உதயகுமார் இருவரும் 11ஆம் வகுப்பு படிக்கும்போதில் இருந்து நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 5ஆம் தேதி உதயகுமார் உயிரிழந்ததையடுத்து,  சோகத்தில் இருந்த மில்டன் நண்பன் இழப்பை தாங்க முடியவில்லை எனவும் தானும் இறந்து விடுவேன் என்று பெற்றோரிடம் கூறியதால், பெற்றோர்கள் மில்டனை நாள்தோறும் மிகுந்த கண்காணிப்புடன் கவனித்து வந்துள்ளனர்.

மேலும் நண்பன் உதயகுமார் இறந்த தேதியான 5ஆம் தேதியே தானும் உயிர் விட வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக வாங்கி வைத்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மில்டனுக்கு அறிவுரை கூறினார்..  இதனால் இனிமேல் இது போல தற்கொலை முயற்சியில் ஈடுபட மாட்டேன் என்று கூறியதால் பெற்றோர்கள் நிம்மதி அடைந்தனர், 

 அதனைத் தொடர்ந்து நேற்று (05-01-2022) அதிகாலை சுமார் 3மணி அளவில் மில்டன் தூக்கில் தொங்கி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதால்  பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது

சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  நண்பன் இழப்பை தாங்க முடியாமல் நண்பனுக்காக தானும் அதே தேதியில் உயிர் விட வேண்டும் என்ற எண்ணத்தில் மில்டன் ஜனவரி 5ம் தேதியான நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

No comments

Thank you for your comments