Breaking News

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் ஒத்திவைப்பு

ஈரோடு, ஜன.4-

கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 06.01.2022 முதல் 08.01.2022 வரை மற்றும் 10.01.2022 ஆகியநாட்களில் நடைபெற இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான  நேர்காணல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி  தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவு செய்தி நாள்.31.12.2021&ன் படி கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் 10.01.2022 வரை நீட்டித்தும் சமுதாய கலாச்சாரமற்றும் அரசியல் கூட்டங்கள்  போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்தும் தமிழக அரசால் உத்திரவிடப்பட்டுள்ளது. 

அதனை தொடர்ந்து, கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு 2022&ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நேர்காணல் நடத்திட உத்தேசிக் கப்பட்டுள்ள நேர்வில் பெரும் எண்ணிக் கையிலான விண்ணப்பதாரர்கள் மற்றும் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடும் நிகழ்வு எழும் என்பதால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை« மற்கொள்ளும் வகையிலும் மற்றும் தற்போது பரவிவரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுத்திடவும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான நேர்காணலினை மறு உத்தரவு வழங்கும் வரையில் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு சென்னை, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

எனவே ஈரோடு மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 06.01.2022 முதல் 08.01.2022 வரை மற்றும் 10.01.2022 ஆகிய 4 நாட்களுக்கு நடைபெற இருந்தகால்நடை பராமரிப்பு உதவியாளர் காலிப்பணியிடத்திற்கான நேர்காணல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார். 

No comments

Thank you for your comments