Breaking News

இருளர் இன படித்த இளைஞர்கள் திறன் பயன்பாட்டு பயிற்சி சுய வேலைவாய்பினை பெற விண்ணப்பிக்கலாம்

திருவள்ளுர், ஜன.4-

திருவள்ளுர் மாவட்டத்தில் பழங்குடியினர் இந்து இருளர் இன படித்த இளைஞர்கள் திறன் பயன்பாட்டு பயிற்சி மூலம் சுய வேலைவாய்பினை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.



திருவள்ளுர் மாவட்டத்தில் 2019-2020ஆம் ஆண்டிற்கு பழங்குடியினர் இனத்தில்; படித்த இளைஞர்களுக்கு திறன் பயன்பாட்டு பயிற்சி மூலம் 

1.சமையல் கலை 

2. ஓட்டுனர் பயிற்சி 

3.தையல் பயிற்சி 

4. மருத்துவ பரிசோதணை பயிற்சி 

5.செவிலியர் பயிற்சி 

6.எலக்டிரிசியன் பயிற்சி 

அளித்து சுய வேலைவாய்பினை ஏற்படுத்திகொள்ள சாதி சான்று, ஆதார் அட்டை நகல், கல்வி சான்று இவற்றுடன் மனுக்களை 10.01.2022க்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், திருவள்ளுர் மாவட்டம் என்ற முகவரிக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளாகள்.




No comments

Thank you for your comments