இன்ஜினியரிங் மாணவர்களுக்கான ஆன்லைன் தேர்வு அட்டவணை வெளியீடு
சென்னை, ஜன.25-
இன்ஜினியரிங் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை உச்சத்தை அடைந்து வருவதையடுத்து பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டுள்ளன. பொறியியல் உள்ளிட்ட பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக பி.இ, பி.டெக், பி.ஆர்க் உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு நவம்பர் &டிசம்பர் மாதங்களில் நடைபெற விருந்த செமஸ்டர் தேர்வுகள் , கொரோனா காரணமாக ஆன்லைனிலேயே நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.
இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து, பிற மாணவர்களுக்கு பிப்ரவரி 1 முதல் மார்ச் 1 வரை ஆன்லைன் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில். அதற்கான தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 1 தொடங்கி மார்ச் முதல் வாரம் வரை காலை, மாலைஎன இருவேளைகளில் தேர்வு நடைபெறும் எனவும், தேர்வுக்கான கால அட்டவணை மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் https://www.annauniv.edu/ தெரிந்து கொள்ளலாம் என்றும் அண்ணா பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாட்டு துறை தெரிவித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாகம், குரோம்பேட்டை எம்ஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயக்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுத உள்ளனர்.
முன்னதாக அனைத்து கலை மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வுகளும் ஆன்லைன் முறையிலேயே நடைபெறும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Click here 👉 https://acoe.annauniv.edu/
No comments
Thank you for your comments