Breaking News

ஆட்சியர் தலைமையில் அனைத்து அரசு அலுவலர்களும் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி இன்று (25.01.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி  அவர்களின் தலைமையில் வாக்காளர் தின உறுதிமொழியை அனைத்து அரசு அலுவலர்களுடன் எடுத்துக்கொண்டார்கள். 

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் 12வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி இன்று (25.01.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் வாக்காளர் தின உறுதிமொழியை அனைத்து அரசு அலுவலர்களுடன் எடுத்துக்கொண்டார்கள். 

அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் இளம் வாக்காளர்களுக்கு பதிய வாக்காளர் அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள். 

மேலும் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட அளவில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற வினாடி வினா போட்டியில் அரையிறுதிக்கு தேர்வு பெற்ற 4 மாணவ மாணவிகளுக்கு நற்சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.  

காஞ்சிபுரம் மாவட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் சிறப்பு சுருக்க திருத்தம் 2022 ல் சிறப்பாக பணிபுரிந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நான்கு நபர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.  

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

No comments

Thank you for your comments