Breaking News

ரயிலின் அடியில் சிக்கியிருந்த ஆண் குழந்தை தாய் உயிருடன் மீட்பு... காட்பாடி ரயில்வே போலீசாருக்கு குவியும் பாராட்டுக்கள்....

வேலூர், ஜன.11-

ரயிலின் அடியில் சிக்கியிருந்த மாத 8 ஆண் குழந்தை தாய் உயிருடன் மீட்ட காட்பாடி ரயில்வே போலீசாருக்கு குவியும் பாராட்டுக்கள்.

தமிழர் பண்டிகையான பொங்கலுக்கு அனைத்து இடங்களிலும் கூட்டநெரிசல்கள் அதிகமாக காணப்படுகிறது. 

இதனையடுத்து அதிவேகமாக பரவி வரும் கொரோனா ஒமேக்ரான்  நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் ரயில் நிலையங்களில் வெளிமாநிலத்தவர் அவர்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர்.. இதனால் காட்பாடி ரயில் நிலையத்தில்  கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுகிறது..

இந்நிலையில், காட்பாடி ரயில் நிலையத்தில் இன்று 10:30 மணியளவில் ஒரு பெண்மணி 8- மாத ஆண் குழந்தையுடன் நடந்து வந்துள்ளார். அப்போது அவர் கால் தடுக்கி விழுந்ததாக தெரிகிறது. எர்ணாகுளத்திலிருந்து பிளக்ஸ்பூர் செல்லும் ரயில் காட்பாடி நிறுத்தத்தில் நிறுத்தும் போது ரயிலின் அடியில் தாயும் குழந்தையும் சிக்கிக்கொண்டார்கள். 

இதனையடுத்து ரயில்வே போலீசார் விரைந்து செயல்பட்டு குழந்தையும் தாயும் உயிருடன் மீட்டனர். குழந்தை நலமாக உள்ளது தாயின் தலையில் பலத்த அடிபட்டு மயங்கிய நிலையில் உள்ளார் இருவரையும் ஆம்புலன்ஸ் மூலமாக வேலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காட்பாடி ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறுகையில் எர்ணாகுளம் ரயில் காட்பாடி ரயில் நிலையத்தில் நிற்கும் பட்சத்தில் இவர் கால் தடுக்கி விழுந்தார் என தெரிகிறது. ரயில் தண்டவாளம் இடையில் விழுந்ததால் குழந்தையும் தாயும் உயிருடன் இருக்கிறார்கள். அடிபட்ட பெண் மயக்க நிலையில் உள்ளதால் இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என இதுவரையில் தெரியவில்லை அவர் மயக்கம் தெளிந்த பிறகே தெரியவரும் அவரிடத்தில் எந்த அடையாள அட்டைகள் எதுவும் இல்லை என தெரிவித்தார்.

தாயையும் 8- மாத  ஆண் குழந்தையையும் காப்பாற்றிய இச்சம்பவத்தால் ரயில்வே போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.. வாழ்த்துக்கள் பணி சிறக்க..

No comments

Thank you for your comments