Breaking News

பயிற்சி மருத்துவர்கள் அறவழியில் போராட்டம்

வேலூர், ஜன.11-

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை தலைமை மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களுக்கு கடந்த 3 மாதமாக உதவி தொகை மாதம் ரூ.25,000 வழங்காததை கண்டித்து 2 நாட்களாக (10.01.2022, 11.01.2022) அமைதியான முறையில் அறப் போராட்டம் நடத்தினார்கள்.


நேற்று (10.01.2022)  பயிற்சி மருத்துவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்கள் குறைகளை சொல்லியும் எவ்வித நடவடிக்கைகளை எடுக்காததால் இன்று (11.01.2022) அறவழியில் போராட்டம் நடத்தினார்கள்.

இன்று  காலை 12 மணி அளவில் வேலூர் அடுக்கம்பாறை தலைமை மருத்துவமனைக்கு  மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பயிற்சி மருத்துவர்களை சந்தித்து தாம் உடனடியாக நடவடிக்கை எடுத்து வழங்க வேண்டிய மூன்று மாத உதவித்தொகை வழங்குவதாகவும்... அமைதி போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கையொப்பமிட்டு பணிக்கு செல்லுமாறு வாக்குறுதி அளித்தார். இதில் மருத்துவமனை டீன் மற்றும் ஆர்.எம்.ஓ.சந்திரமோகன் மற்றும் பேராசிரியர் பிரகாசம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். 

இதுகுறித்து பயிற்சி மருத்துவர்களை விசாரித்தபோது, இந்த  கொரனா பேரிடர் காலத்தில் நாங்கள் கடுமையாக உழைத்தும் எங்களுக்கு மூன்று மாத காலமாக உதவி தொகை வழங்காததால், எங்களுக்கு உரிய அத்தியாவசியத் தேவைகளைக்கூட பூர்த்திசெய்ய கொள்ள முடியவில்லை. இதைப்பற்றி டிசம்பரில் உரிய முறையில் தகவலை... மனக்குமுறலை மருத்துவமனை அதிகாரிகளிடம் சொன்னபோது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது நடவடிக்கை எடுப்பார்களா? என சந்தேகமாக தான் உள்ளது என்று தங்களது மனக்குறையை  தெரிவித்தனர்.

இதில் ஆண் பயிற்சி மருத்துவர்கள் 54 பேரும் .. பெண் பயிற்சி மருத்துவர்கள் 50 பேரும் கலந்து கொண்டனர். இந்த கொரோனா மற்றும்  ஓமைக்ரான் காலத்தில் பயிற்சி மருத்துவர்களின் வேதனை மிகவும் கவலை அளிக்கிறது. அரசு விரைந்து உடனடியாக பயிற்சி மருத்துவர்களின் மன வேதனை நீக்கி அவர்களுக்கு உரிய உதவி தொகைகளை உடனடியாக அளித்து பயிற்சி மருத்துவர்களை காத்து பணி ஆற்ற வழி வகை செய்யவேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

No comments

Thank you for your comments