இரண்டரை வயது சிறுமி இரண்டு நிமிடங்களில், 40 தலைப்புகளில் உள்ள பெயர்களை சொல்லி, 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்' புத்தகத்தில் இடம்பிடித்தார்....
காஞ்சிபுரத்தில், இரண்டரை வயது சிறுமி இரண்டு நிமிடங்களில், 40 தலைப்புகளில் உள்ள பெயர்களை சொல்லி, 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்' புத்தகத்தில் இடம்பிடித்தார்.
காஞ்சிபுரம் அடுத்த புஞ்சையரசந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன் - மோனிகா தம்பதி மகள் தன்யஸ்ரீ இரண்டரை வயது.இவர் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் சாதனைக்காக, 40 தலைப்புகளில் உள்ள பெயர்களை, இரண்டு நிமிடங்களில் சொல்லி சாதனை படைத்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர் கூறியதாவது:
மகளுக்கு முதலில், வண்ணங்கள் குறித்த புத்தகத்தை காட்டி சொல்லி கொடுத்தோம்; பொருட்கள் பெயர்களையும் சொல்லி கொடுத்தோம்.
அவற்றை ஞாபகத்தில் வைத்து, எப்போது கேட்டாலும் சரியாக சொல்வாள். தற்போது 40 தலைப்புகளில் உள்ள பெயர்களை அதாவது, திருவிழா, பழங்கள், உடல் உறுப்புக்கள், விலங்குகள், தமிழ் மாதங்கள் உள்ளிட்டவற்றை கற்றுக்கொடுத்தோம்.
நாங்கள் மாற்றி மாற்றி கேட்டாலும், பொருட்களையும், பெயர்களையும் சரியாக சொல்வாள். அதை வீடியோவில் பதிவு செய்து, ஹரியானாவில் உள்ள இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தோம். அவர்கள் பார்த்து, தனித்துவமான தலைப்பில் இரண்டு நிமிடங்களில் சொல்லியதால், தேர்வு செய்துள்ளனர்.
அதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை எங்களுக்கு வழங்கினர்.
அதே போல் சென்னையில், 'கலாம் வேர்ல்டு ரெக்கார்டு' அலுவலகத்திற்கு சென்று, அதே தலைப்பில் உள்ள பொருட்களை, இரண்டு நிமிடங்களில் சொல்லிய பின், அதற்கான சாதனை சான்றிதழ் வழங்கினர்.
No comments
Thank you for your comments