பாரதபிரதமர் ஆரோக்கிய வாழ்வு பெற காஞ்சி காமாட்சி அம்பாள் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள்
காஞ்சிபுரம் :
பாரதபிரதமர் ஆரோக்கிய வாழ்வு பெற காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சார்பில் காஞ்சி காமாட்சி அம்பாள் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மக்களின் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் நீண்ட ஆயுளை முன்னிட்டு ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் கோவிலில் இன்று மாலை ஐந்து முப்பது மணி அளவில் ஸ்ரீ மிருத்யுஞ்சய ஜபம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயில் ஸ்தானிகர் நடராஜ சாஸ்திரி தலைமையில் நடைபெற இருக்கின்றது.
காலையில் ஸ்ரீ மோடிஜியின் நல்லாட்சி தொடரவும் அவரின் நீண்ட ஆயுளுக்கும் ஸ்ரீ காமாட்சிக்கு விசேஷ அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில் மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு. பொதுச் செயலாளர்கூரம். விஸ்வநாதன்.
நகர தலைவர் அதிசயம் குமார் நகர பொதுச்செயலாளர் காஞ்சி ஜீவானந்தம்.வாசன் மாவட்ட மகளிரணி ரமணி, மாலதி, மஞ்சுளா, டாக்டர்.தேவகி ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாட்டினை மூத்த பாஜக.நிர்வாகி மோகன்லால் ஜெயின் சிறப்பாக செய்திருந்தார்.
No comments
Thank you for your comments