Breaking News

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு விற்பனை

ஒசூர், ஜன.3-

தமிழ்நாடு வீட்டு வசதி  வாரியம், ஒசூர் வீட்டு வசதி பிரிவு, ஒசூர் திட்டப் பகுதி -7ல் கட்டி முடிக்கப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில்  உள்ள  குறைந்த வருவாய், பொருளாதாரத்தில் நலிவுற்றோர்  பிரிவு  (LIG & EWS) மற்றும்  திட்டப் பகுதி-16ல்  மத்திய மற்றும்  உயர்  வருவாய் பிரிவு  அடுக்குமாடி  குடியிருப்புகள்    “முதலில்   வருவோருக்கு முன்னுரிமை”   அடிப்படையில்  விற்பனை  செய்யப்பட்டு  வருகிறது. 


பொது  மக்கள்   அனைவரும்  இந்த  அரிய வாய்ப்பை  பயன்படுத்திக்  கொள்ளலாம்.

மேலும்  விபரங்களுக்கும் மற்றும் காலியாக உள்ள  குடியிருப்புகள் விபர அறிக்கை www.tnhb.tn.gov.in  என்ற இணையதள  முகவரியில்  28-.12.-2021 முதல் காணலாம். 

இவ்வாறு    மாவட்ட ஆட்சித் தலைவர்  ச.திவ்ய  தர்சினி தெரிவித்துள்ளார்.

அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.tnhb.tn.gov.in/



No comments

Thank you for your comments