Breaking News

அந்தியூர் வாரச்சந்தை மேம்பாடு பணி தொடக்கம்

ஈரோடு, ஜன.24-

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வாரச்சந்தையில் சந்தை வளாகத்தில் சந்தை மேம்பாடு பணிகளை அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம்  பூமி பூஜை செய்து  துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வாரச் சந்தையில் கடைகள் மற்றும் உணவகம் அமைக்க வேண்டுமென அந்தியூர் வாரச் சந்தை வியாபாரிகள் மற்றும் நுகர்வோர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து இருந்தனர்.  

மேலும்  அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர்  ஏ ஜி வெங்கடாசலத்திடம்   வியாபாரிகள் நேரில் சென்று  கோரிக்கை மனு வழங்கினர். இதையடுத்து, அந்தியூர்  வாரச் சந்தையில் கடைகள் மற்றும் உணவகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 5 கோடியே 75 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  

இதற்கான பூமி பூஜையில், அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு  பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பாண்டியம்மாள், அந்தியூர் நகர பொறுப்பாளர் காளிதாஸ், நகரத் துணைச் செயலாளர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments